search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி சாவு"

    • எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.
    • அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.

    சேலம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த எரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பொட்டி 72, இவர் ஊர் ஊராக நடந்து சென்று கருவாடு வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தீவட்டிப்பட்டி சமத்துவ புரம் அருகே சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்பேது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த ஒரு மினி சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி பாப்பாத்தி (62) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி டெம்போ எதிர்பாராத விதமாக பெரியசாமி மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகில் உள்ள மந்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது27). தேங்காய் வியாபாரியான இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு சந்தேஷ் (8) என்ற மகனும், பாரதி (6), யாதினி என்ற மகள்களும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு வந்த பெரியசாமி வியாபாரத்தை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஊத்தங்கரையில் இருந்து மத்தூர் வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்ற மினி டெம்போ எதிர்பாராத விதமாக பெரியசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விபத்தில் பலியான பெரியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பேருந்து இருசக்கர வாகன த்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டு புளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). இவர் எழுச்சம்பள்ளம் பகுதியில் தேங்காய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் தேங்காய் மண்டியை மூடி விட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தருமபுரிக்கு திருமண நிகழ்ச்சிக்காக பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா பேருந்து இருசக்கர வாகன த்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அந்த சாலை வழியாக சென்றவர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து விசாரணை நடத்தியதில் சுற்றுலா பேருந்தை ஓட்டி வந்தவர் பாண்டிச்சேரி மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 22) என்பது தெரிய வந்தது.

    உடனே போலீசார் கோபிநாத்தை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அந்த வழியாக வந்த கார் ஒன்றின் டயர் திடீெரனெ்று வெடித்து வண்டி நிலைதடுமாறி சரவணன் மீது மோதியது.
    • தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது52).

    இவர் பட்டுகூடு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சீராம்பட்டி பகுதிக்கு சென்றார். அப்போது அவர் சீராம்பட்டி அருகே தருமபுரி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்றின் டயர் திடீெரனெ்று வெடித்து வண்டி நிலைதடுமாறி சரவணன் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் உடனே அங்கு சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளைவில் வண்டியை திரும்புபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சாலை குள்ளாதிரம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது43). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் சங்கம்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் மாலை வீடு திரும்பி வரும்போது கெட்டூர் பிரிவு ரோடு வளைவில் வண்டியை திரும்புபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் நிலைத்தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சக்திவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனே பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது லாரியை லைட் எதுவும் போடாமல் சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார்.
    • மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபிமோன் (வயது 27), மீன் வியாபாரி. இவர் நேற்று இரவு தனது நண்பர் மெர்வின் ஜெஷோவுடன் தக்கலை பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    தக்கலை கோர்ட் அருகில் வரும்போது நாமக்கல், வள்ளிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தனது லாரியை லைட் எதுவும் போடாமல் சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். இதனால் நிலைதடுமாறி அபிமோன் லாரி மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அபிமோன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மெர்வின் ஜெஷோ சங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்துபோன அபிமோன் உடலை போலீசார் கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் ஒப்படைத்தனர். இது சம்மந்தமாக காயம் அடைந்த மெர்வின் ஜெஷோ தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் லாரி ஓட்டுநர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இறந்துபோன அபிமோனுக்கு குமாரி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.
    • லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது27). இவர் மோட்டார் சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று தருமபுரி-ஓசூர் சாலையில் சின்னதடங்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அந்த வழியாக டிப்பர் லாரி ஒன்று அவர் மீது வேகமாக வந்து மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர் செல்வம் படுகாய–மடைந்தார். அப்போது லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே ஓடிவந்து காயமடைந்த பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்ைட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் பன்னீர் செல்வம் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சாய்சித்ரா (24) கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • போளூரை சேர்ந்தவர்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

    வேலூர்:

    போளூர் அருகே உள்ள எட்டி வாடி பாலாத்து வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 48). பூ வியாபாரி. தினமும் மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு பூக்கள் கொண்டு செல்வது வழக்கம். நேற்று அதிகாலை பைக்கில் பூக்கள் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி வந்தார்.

    கணியம்பாடி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×